உள்ளூர் செய்திகள்

தேசிய தரச் சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ்- அமைச்சர் வழங்கினார்

Published On 2022-09-13 08:30 GMT   |   Update On 2022-09-13 08:30 GMT
  • சான்றிதழ் கிடைக்க பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.
  • 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடி:

மன்னார்குடி மாவ ட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதற்கான சான்றிதழை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், லக்ஷயா மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.

அதன் அடிப்படையில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல் மகப்பேறு அறுவை சிகிச்சை அறைகளை சிறந்த முறையில் பராமரித்ததற்காக நடத்தப்பட்ட லக்ஷயா ஆய்வின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் ஆண்டுதோறும் சுமார் ரூ.5 லட்சம் சிறப்பு நிதி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News