அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆலங்குளத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார். அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் அழகு ட்ரைவ்-ன் ஓட்டல் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகரச்செயலாளர் நெல்சன், காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டபிரதிநிதி வாசு, மாறன், இளைஞரணி ரமேஷ், அத்தியூத்து கோமு, தளபதி முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் செயலாளர்கள், தி.மு.க. மாநில, மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.