உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே மினி வேன்- கார் நேருக்கு நேர் மோதல்: 21 பேர் படுகாயம்

Published On 2022-09-16 13:38 IST   |   Update On 2022-09-16 13:38:00 IST
  • கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
  • தொடர்ந்து மருத்துவரிடம் தரமான சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூரா கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள், 5 ஆண்கள் உள்ளிட்ட 23 பேர் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்கூட்டத்திற்கு மினி வேனில் சென்றனர். கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதே பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரத்தினம் (வயது 56) மினி வேனை வாகனத்தை ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே கரீம்ஷா தக்கா அருகேவந்தபோது எதிரே வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மினி வேனில் வந்த நாராயணன், சசிகுமார், ரத்தினம், பச்சையம்மாள், வசந்தா உள்ளிட்ட 18 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் காரை ஓட்டி வந்த திருக்கோவிலூர் அருகே கடம்பூர் மரூர் புதூரை சேர்ந்த அன்பழகன் மகன் திருமலைச்சாமி (வயது 28) மற்றும் அவருடன் காரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் பிரவீன் குமார் (27) விஜயராஜ் மகன் வினோத் குமார் (26) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்பிரபு, அழகுவேல் பாபு, நகரச் செயலாளர் பாபு ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மருத்துவரிடம் தரமான சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார். அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு சென்று திரும்பிய வாகனம் விபத்து ஏற்பட்டு காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News