மினி பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சமாதானக் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கோவில்பட்டியில் மினிபஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்க வேண்டும் - சமாதான கூட்டத்தில் முடிவு
- வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மினி பஸ்களில் ஏறிய பயணிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்ற அழைக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மினி பஸ்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முறையாக இயங்கவில்லை எனக் கூறி ரெயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் மினிபஸ் உரிமையாளர்கள், ரெயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மினிபஸ்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வழித்தடங்கள், நேரங்களில் வாகனங்களை இயக்க வேண்டும், ரெயில்வே துறையால் அனுமதி வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்சா வாகனங்கள் மட்டுமே ரெயில்வே பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க வேண்டும். மினி பஸ்களில் ஏறிய பயணிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்ற அழைக்கக் கூடாது.
முறையான ஆவணங்கள், முறையான கட்டணம் வசூலித்து விதிமீறல் இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும். கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.