உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் உரிய விலை கேட்டு ரோட்டில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Published On 2022-06-16 15:23 IST   |   Update On 2022-06-16 15:23:00 IST
கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி;

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் மற்றும் காக்கா தோப்பு பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஊட்டியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு பல மாதங்களாகவே பணியில் கால்நடை மருத்துவர்கள் கிடையாது. மேலும் ஆஸ்பத்திரியில் உரிய மருந்துகளும் இருப்பு வைப்பதில்லை. இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று விட்டு திரும்பும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் கால்நடைகளை இழக்கும் சூழலும் உள்ளது. இதை உடனடியாக போக்கவும் பாலுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News