உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - சென்னை மக்கள் தவிப்பு

Published On 2022-11-03 23:03 GMT   |   Update On 2022-11-03 23:03 GMT
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நேற்று 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
  • மெட்ரோ ஊழியர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நேற்று வழக்கம்போல சென்னையில் இயங்கி கொண்டு இருந்தன.

இந்நிலையில், கோயம்பேடு - பரங்கிமலை மார்க்கத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை 5 நிமிடத்துக்கு ஒருமுறை என இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில்கள், நேற்று இரவு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.

மழைக்காலங்களில் மின்சார ரெயில் நிலையங்களில் காத்திருப்பதை போல, மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர்.

மெட்ரோ ஊழியர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் இரவு 8.30 மணிக்கு மேல் கோயம்பேடு - பரங்கிமலை இடையில் வழக்கம்போல மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News