உள்ளூர் செய்திகள்

பயணிகள் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு ரெயில் - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு

Published On 2023-09-14 18:42 GMT   |   Update On 2023-09-14 18:42 GMT
  • பயணிகள் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
  • இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் திங்கட்கிழமை (18-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவையில் இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

நெரிசல்மிகு நேரங்களில், அதாவது இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News