உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் மீட்டு காப்பபத்தில் சேர்ப்பு

Published On 2023-02-16 15:29 IST   |   Update On 2023-02-16 15:29:00 IST
  • கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
  • பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பேன்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த திருமக்கோட்டை பள்ளிவாசல் அருகில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தேவிஸ்ரீ (வயது 45) என்ற வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.

இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரைபடி, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பக மீட்பு குழுவினர் இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் ஜெய்சரண் ஆகியோர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.

அப்போது மாவட்ட கவுன்சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன், தன்னார்வலர் அகமது ஆகியோர் சென்றனர்.

பின்னர், திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உரிய பதிவு பெற்று, மாவட்ட மனநல மருத்துவர் புவனேஸ்வரியை சந்தித்து பரிசோதனை செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு அளித்து மனநல சிகிச்சை கொடுத்து பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பதே லட்சியம் என்றார்.

Tags:    

Similar News