உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

பஸ்களில் பெண்கள் இருக்கையில் அமரும் ஆண்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2022-06-17 06:24 GMT   |   Update On 2022-06-17 06:24 GMT
  • அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர்.
  • ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் :

அரசு பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும்.முண்டியடித்து பஸ்சுக்குள் ஏறி நிற்கும் பயணிகள் சீட் கிடைக்காவிடினும், நெரிசலில் சிக்கியவாறு பயணிக்கின்றனர். அதேசமயம் சில ஆண்கள், பெண்களுக்கான சீட்டில் 'ஹாயாக' அமர்ந்து பயணிப்பதும், முன்புற படிக்கட்டில் நின்று கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.இதனால் பெண்கள், பஸ்சில் ஏறி, இறங்குவதை சிரமமாக கருதுகின்றனர்.எனவேபெண்களுக்கான சீட்டில் ஆண்கள் அமர்ந்து ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூரை சேர்ந்த சில கண்டக்டர்கள் கூறியதாவது:-

அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.ஆண்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினால் பிரச்னை ஏற்படுகிறது. பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமரக்கூடாது என்பதை, அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது.ஆண்களை எழச்செய்து பெண்களை அமரச்செய்யவே முற்படுகிறோம் என்றனர்.

Tags:    

Similar News