சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.
மேலாத்தூரில் சாஸ்தா கோவிலில் பாலாலய விழா
- ஆத்தூர் அருகே மேலாத்தூர் சுப்ரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வன்னியுடையார் சாஸ்தா கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது.
- வன்னியுடையார் சாஸ்தா மற்றும் பரிவார தேவதை களுக்கு பாலாலயம் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே மேலாத்தூர் சுப்ரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வன்னியுடையார் சாஸ்தா கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது. இத்திருக்கோவில் வரிதாரர்கள் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற் கொள்ளப பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பாலாலய விழா நடைபெற்றது.
முன்னதாக காலையில் மஹா கணபதி ஹோமத்து டன் விழா தொடங்கியது. தொடர்ந்து மஹா லெட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், சரபசூலினி ஹோமம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்ற பின்பு பூர்ண புஷ்க லாம்பாள் சமேத வன்னி யுடையார் சாஸ்தா மற்றும் பரிவார தேவதை களுக்கு பாலாலயம் நடைபெற்றது. இதில் கோவில் வரிதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் வெள்ளையா, செயலாளர் குமார் சுப்பையா, செல்வம், சோமசுந்தர பாண்டி, சங்கர சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.