உள்ளூர் செய்திகள்

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ மருத்துவ மையங்கள்

Published On 2023-11-26 09:26 GMT   |   Update On 2023-11-26 09:26 GMT
  • சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் தகவல்
  • மலையேற்றத்தின்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு

கோவை, 

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி சிகிச்சை மைய ங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

இதுதொடர்பாக சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:-

மத்திய அரசின் சுகாதா ரம், குடும்ப நலத்து றையின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு, கேரள அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறையின் மூலம் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகள், மருத்துவ சேவைகள் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ வசதியை கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமி டப்பட்டுள்ளது.

மலையேற்ற பாதைகளில் போதுமான மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. மேலும் சபரிம லையில், நிலக்கல், பம்பா, அப்பாச்சி மேடு, நீலிமலை, சாரல்மேடு, சந்நிதானம் ஆகிய இடங்களில் மருத்து வமனைகள் உள்ளன.

கூடுதலான அவசர மருத்துவ உதவிக்காக மலையேற்றப் பாதையில் பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதலு தவி ரத்த அழுத்தப் பரிசோதனை, ஆக்சிஜன், டிபிபிரிலேட்டர் போன்ற வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது.

பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் சம்பிராதய விரதம் தொடங்கிய பிறகும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மேலும் தங்களின் சிகிச்சை பதிவுகள், மருந்து களை உடன் கொண்டு வர வேண்டும். மலையேற்ற த்தின் போது பக்தர்களுக்கு நெஞ்சுவலி அல்லது மூச்சு த்திணறல் ஏற்பட்டால் அவ ர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News