உள்ளூர் செய்திகள்

குறுக்குத்துறையில் உள்ள மாநகராட்சி முகாம்.

நெல்லை மாநகராட்சி சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ முகாம்

Published On 2022-10-12 14:44 IST   |   Update On 2022-10-12 14:44:00 IST
  • மாநகராட்சி முகாமில் தங்கி உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • முகாம் அலுவலகம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நெல்லை:

உலக வீடற்றவர்கள் தினத்தையொட்டி டவுன் குறுக்குத் துறை மாநகராட்சி முகாமில் தங்கி உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி மருத்துவர், செவிலியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

. மேலும் குறுக்குத்துறை முகாம் அலுவலகம் வண்ண கலர் பேப்பர்கள் ஒட்டப்பட்டு கலர் கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகள், ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் குப்பைகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பொடி தூவப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News