உள்ளூர் செய்திகள்
பெண் போலீசார் ஒருவருக்கு மருத்துவர் பரிசோதனை செய்த காட்சி.
மகளிர் தினத்தையொட்டி நெல்லை மாநகர ஆயுதப்படை பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்
- மாநகர ஆயுதப்படை வளாகத்தில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமில் பெண் போலீசாருக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர ஆயுதப்படையில் உள்ள பெண் போலீசாருக்கு மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
முகாமில் பெண் போலீசாருக்கு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, எடை மற்றும் உயரம், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.