உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமை மேயர் சரவணன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.

சிறுவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு : மாநகராட்சி சார்பில் டவுனில் மருத்துவ முகாம்-மேயர் தொடங்கி வைத்தார்

Update: 2022-12-01 10:12 GMT
  • வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
  • நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

நெல்லை:

வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு

இந்நிலையில் பருவமழையையொட்டி சில இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

டவுன் பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெரு உள்ளிட்ட இடங்களில் சிறுவர்- சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மருத்துவ முகாம்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், தனது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று இன்று 24-வது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர் ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ெபாது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 24-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Tags:    

Similar News