உள்ளூர் செய்திகள்

நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2023-11-21 10:06 GMT   |   Update On 2023-11-21 10:06 GMT
  • நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.
  • விவசாயிகள் மழைநீரை பயன்படுத்தி நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபநாசம்:

தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறும்.

ஆனால் காவிரியில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததால் இந்தாண்டு நெல் உற்பத்தி குறைவான அளவிலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் தற்போது விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தஞ்சையை அடுத்த பாபநாசம் பகுதியில் உழவுப்பணி, பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.

ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் பாய் நாற்றங்கால் மூலம் பயிரிப்படும் நாற்றுகள் 20 முதல் 25 நாட்களுக்குள் நடவுக்கு தயாராகி விடுகிறது.

தற்போது பம்பு செட் வசதியில்லாத விவசாயிகள் மழை நீரை பயன்படுத்தி நாற்றுகளை விலைக்கு வாங்கி நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

இதுக்குறித்து முன்னோடி விவசாயி அயோத்தி கூறுகையில் நெல் சாகுபடிக்கு தேவையான உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.

Tags:    

Similar News