போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
- 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.
- பேரணியாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பூதலூர்:
பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பல வாரங்களாக வழங்கப்படாமல் இருக்கும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க கோரி திருக்காட்டுபள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் கரையில் இருந்து நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழக்கியபடி பேரணி யாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கட்சியின்மாவட்ட செயற் குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், வருவாய் ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் ஆகியோர் நுதன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பூதலூர் தாசில்தார் மரியஜோசப் அளித்த உறுதியை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
இதனால் வங்கி முன் பரபரப்பாக காணப்பட்டது.