உள்ளூர் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
- மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள்,மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
- இதற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள்,மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்டி. வரியை மத்திய அரசு கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சண்முகம், இளங்கோவன், பாண்டியன், ஜெயராஜ் ,பாலகுரு, சந்திரோதயம், முரளி, சத்தியபாமா, சந்திரசேகரன், பாலையா, ஜெயந்தி, கலியபெருமாள், விஜய், நடராஜன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.