உள்ளூர் செய்திகள்

மன்னார்குடி நகர்மன்ற கூட்டம் நடந்தது.

மன்னார்குடி நகர்மன்ற கூட்டம்

Published On 2023-09-02 09:54 GMT   |   Update On 2023-09-02 09:54 GMT
  • அரசு பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
  • தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.

மன்னார்குடி:

மன்னார்குடி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். ஆணையர் நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

செந்தில் செல்வி:-

பாதாள சாக்கடை திட்டம் மன்னார்குடியில் நிறை வேற்ற உள்ள நிலையில் அதில் இணைப்பு பெறும் வீடுகளு க்கான வைப்புத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.

பாரதிமோகன்:-

பழங்கள் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பழக்கடைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

திருச்செல்வி:-

தனது வார்டுக்கு உட்பட்ட ஆர்.பி. சிவம் நகரில், குப்பை எடுத்து வரும் வாகனங்களை எடை போடுவதற்கான நிலையத்தை அமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கலைவாணி:-

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

எனவே, அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

ஏபி.அசோகன்:-

ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டெண்டர் வைக்கப்பட்டு ள்ளது. அதில் உள்நோக்கம் உள்ளது.

சுமதி:-

எம்.ஜி.ஆர் நகர், தெற்கு வீதி, வடம்போக்கி தெரு ஆகியவற்றில் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்து தர வேண்டும்.

ஐஸ்வர்யலட்சுமி:-

தெருக்களில் குப்பை எடுப்பதை குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சங்கர்:-

கம்மாள தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சூர்யகலா:-

குன்னோஜி ராஜபாளையம் தெருவில் குடிநீர் இணைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

ராஜாத்தி:-

மீன் மார்க்கெட் கழிவுகளை அப்புறப்படுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பாலமுருகன்:-

தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன்:-

அந்தோணியார் கோவில் தெருமழைநீர் வடிகாலை சீரமைத்து தர வேண்டும்

துணைத் தலைவர் கைலாசம்:-

பாமணி சுடுகாடு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே உள்ள வாய்க்காலுக்கு இருபுறமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு நகர்மன்ற தலைவர் சோழராஜன் பதிலளித்து பேசும்போது:-

உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்க ப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.

Tags:    

Similar News