உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாக கூறி வாலிபரிடம் ரூ.67 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

Published On 2025-02-27 10:37 IST   |   Update On 2025-02-27 10:37:00 IST
  • கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், அதில் சேருவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • பல்வேறு தவணை மூலம் மர்ம நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ரூ.67 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் உங்களது மனைவிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், அதில் சேருவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய செல்வராஜ் பல்வேறு தவணை மூலம் மர்ம நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ரூ.67 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார். பணம் பெற்று கொண்ட பின் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராஜ் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதிராஜா, முநியாக, செல்வ குமார், போலீஸ்காரர் பொன்பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அரசு வேலை வாங்கிய தருவதில் மோசடி செய்தவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கனாபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் கவின் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News