உள்ளூர் செய்திகள்

தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி

Published On 2023-10-20 08:48 GMT   |   Update On 2023-10-20 08:48 GMT
  • நவராத்திரி விழா கடந்த 14-ந் தேதி தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தொடங்கியது.
  • கிருஷ்ணர், ராதை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு பகுதியில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரி விழா கடந்த 14-ந் தேதி தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தொடங்கியது.

முன்னதாக கிருஷ்ணர், ராதை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து எம்பெருமான் ஸ்ரீவாரிக்கு காலை முதல் விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து தினசரி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருட்ஷக, சர்வ பூபாள வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

நேற்று மலையப்பசாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

Similar News