உள்ளூர் செய்திகள்

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யா கணபதி யாகம்- நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-02-24 09:08 GMT   |   Update On 2023-02-24 09:08 GMT
  • அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.
  • சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது.

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு- கேது பரிகார ஸ்தலமான ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது.

காலை 9 மணிக்கு கணபதி யாகத்துடன் தொடங்குகிறது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 12 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிர் இளநீர் பன்னீர் விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தேசிய தலைவர் ஸ்ரீ தரன்ஜி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குகிறார். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News