உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே ஆட்சிக்காடு கிராமத்தில் பொன்னேரி அம்மன் மகா கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

மரக்காணம் அருகே பொன்னேரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

Published On 2023-06-28 14:27 IST   |   Update On 2023-06-28 14:27:00 IST
  • கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
  • இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு உள்ள பொன்னேரி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம். 6 மணிக்கு வாஸ்து சாந்தி பிறவேமும், இரவு 9 மணி அளவில் அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், விமான கலசம் பிரதி 24-ந்தேதி மகா பூர்ண ஹிதி பிரசாதம், 25-ம் தேதி 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News