உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இந்த நிலையில் பிரதாப் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.
மதுரை
மதுரை அலங்காநல்லூர் காந்தி கிராமம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப் (வயது 32). இவர் மீது செயின் பறிப்பு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் பிரதாப் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்படி குண்டர் சட்டத்தின் கீழ் பிரதாப்பை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.