உள்ளூர் செய்திகள்

மாதம் ரூ.1500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-18 07:52 GMT   |   Update On 2022-08-18 07:52 GMT
  • மாதம் ரூ. 1500 உதவித்தொகை பெற தமிழ் திறனறிவு தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

மதுரை

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 1-ம்தேதி நடத்தப்படும்.

அப்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE /உட்பட) பிளஸ்-1 மாணவர்கள், தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் வருகிற 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாநில அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News