உள்ளூர் செய்திகள்

ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி.

ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி

Published On 2022-06-28 09:44 GMT   |   Update On 2022-06-28 09:44 GMT
  • மதுரை ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
  • குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மதுரை

சர்வதேச யோகாதினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்குவது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

மதுரை மத்திய சிறையில் 680 தண்டனை கைதிகள், 842 விசாரணை கைதிகள், 166 நீதிமன்ற விசாரணை கைதிகள், 299 தடுப்புக்காவல் கைதிகள் உள்பட மொத்தம் 1987 சிறைவாசிகள் உள்ளனர்.

இவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சியில் மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மத்திய ஜெயில் கைதிகளுக்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் ஜெயிலில் இருந்து ஆனபிறகு குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும்" என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News