உள்ளூர் செய்திகள்

நீச்சல் போட்டியில் உலக சாதனை

Published On 2022-09-28 08:01 GMT   |   Update On 2022-09-28 08:01 GMT
  • நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்த மதுரை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • இவர் ராமேசுவரம்- தலைமன்னார் இடையேயான 60 கி.மீ தூரத்தை 19.45 மணி நேரங்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

மதுரை

மதுரையை சேர்ந்த நீதிராஜன்-அனுஷா தம்பதியின் மகன் சினேகன் (14), 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ராமேசுவரம்- தலைமன்னார் இடையேயான 60 கி.மீ தூரத்தை 19.45 மணி நேரங்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தவர். இந்த நிலையில் சினேகன் அயர்லாந்து- ஸ்காட்லாந்து இடையே 35 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள வடக்கு கால்வாயை, 14 மணி 36 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதன் மூலம் அயர்லாந்து வடக்கு கால்வாயை 14 வயதில் கடந்த முதல் நீச்சல் சாதனையாளர்' என்ற பெருமை கிடைத்துள்ளது. சர்வதேச நீச்சல் போட்டியில் சாதனை படைத்த சினேகன், அவரது பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோைர தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம் மற்றும் பலர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News