உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?

Published On 2023-06-09 08:46 GMT   |   Update On 2023-06-09 08:46 GMT
  • விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
  • விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News