உள்ளூர் செய்திகள்

 திருமுருகன் 

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம்; அப்பள சங்கம் அறிக்கை

Published On 2023-02-02 07:49 GMT   |   Update On 2023-02-02 07:49 GMT
  • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அப்பள சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

மதுரை

தமிழ்நாடு அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக எந்த திட்டமும் இல்லை. தேசிய சாலை போக்குவரத்து திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதில் பரமக்குடி-ராமேசுவரம் சாலையை சேர்க்க வேண்டும். உழவன் நல நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.11.40 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

ஒரே நாடு ஒரே வரி அதுவும் 5 சதவீத வரியே என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை. தேசிய வணிகர்நல வாரியம் இன்று வரை செயல்முறைக்கு வரவில்லை. வணிகர்களுக்கான ஓய்வூதியம் அறிவிப்போடு நின்று விட்டது. தேசிய அளவில் வருவாய் ஈட்டித் தரும் அப்பள வணிகர்களின் வாழ்வாதாரம், குடும்ப நலனைக் காக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News