உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்ட அனைத்துத்துறை சார்பில் பாண்டிகோவில் சுங்கசாவடி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி அந்த இடத்தை அமைச்சர் பி.மூர்த்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், கோ. தளபதி எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் சரவணன் உள்ளனர்.



 




 


உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2023-01-23 13:22 IST   |   Update On 2023-01-23 13:29:00 IST
  • உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
  • மாவட்ட நிர்வாகத்தால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துறை சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவில் பயனாளிகள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர்சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) காளிதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News