உள்ளூர் செய்திகள்

செல்லூர் ஜீவா நகர் பகுதியில் குப்பை தொட்டிகள் நிரம்பியதை படத்தில் காணலாம்.

டன் கணக்கில் குப்பைகள் தேக்கம்

Published On 2023-09-19 08:02 GMT   |   Update On 2023-09-19 08:02 GMT
  • மதுரையில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது.
  • இதனால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

மதுரை

தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகள் அதிகரித்தாலும் அதற்காக எந்த வசதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை.

விரிவாக்க பகுதியான அவனியாபுரம், வில்லா புரம், வண்டியூர், திருப்ப ரங்குன்றம் போன்ற பகுதி களில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை வசதி போன்றவை கொண்ட வரப்படவில்லை.

மேலும் வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. மாந கராட்சி சாா்பில் குப்பை களை சேகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் 90 சதவீதம் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் 100 சதவீதம் மனித உழைப்பை நம்பியே உள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சியில் குப்பைகள் முழுவதும் அகற்றப்படு வதில்லை. இதனால் முக்கிய சாலைகள், தெருக் கள் என அனைத்து பகுதி களிலும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. பண் டிகை காலங்களில் வழக் கத்தை விட குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. இத னால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மதுரையில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வாழை மரம், மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு முதல் குவியல் குவியலாக குப்பை தொட்டியில் பொதுமக்கள் போட ஆரம்பித்தனர். சிலர் நடுரோட்டிலும் குப்பைகள் கொட்டுவதை பார்கக முடிகிறது.

இதன் காரணமாக இன்று காலை மதுரை நகரம் குப்பை காடாக காட்சியளித்தது. குறிப்பாக பெரியார் பஸ்நிலையம், மாசி வீதிகள், ஜெய்ஹிந்துபுரம், மகால் பகுதிகள், ஜீவா நகர், செல்லூர், அண்ணாநகர், பி.பி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் பகுதியில் குப்பைகள் தேங்கின.

பணியாளர்கள் பற்றா குறையால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததாலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் இன்னும் அதற்கான முன்னெடுப்பை தொடங்க வில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி தற்போது சுகாதார சீர்கேட்டில் உள்ளது.

Tags:    

Similar News