உள்ளூர் செய்திகள்

வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது

Published On 2023-06-11 14:37 IST   |   Update On 2023-06-11 14:37:00 IST
  • குற்றசம்பவங்களில் ஈடுபட வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
  • சந்தேகப்படும் படியாக ஒரு சிறுவன் நின்று ெகாண்டிருந்தான்.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகு புரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி யிருந்த வாலிபரை பிடித்த னர். அவரிடம் விசாரித்த போது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி (வயது33) என்பது தெரியவந்தது.

அவரும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் வாளுடன் சுற்றி திரிந்திருக்கிறார். இதை யடுத்து அவரையும் போலீ சார் கைது செய்தனர்.

மதுரை திடீர் நகர் போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது டி.எம். கோர்ட்டு சந்திப்பு அருகே சந்தேகப்படும் படியாக ஒரு சிறுவன் நின்று ெகாண்டி ருந்தான்.

அவனை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவனிடம் வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவனிடம் விசாரித்தபோது, அவன் அச்சம்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அந்த பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News