உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
- பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு
மதுரை
மதுரை கீழ் மதுரை, சி.எம்.ஆர் ரோடு, அரிஜன காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெற்றிவேல் பாண்டி என்ற டங்காரு (வயது 22). இவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வெற்றிவேல் பாண்டி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
எனவே வெற்றிவேல் பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி வெற்றிவேல் பாண்டி என்ற டங்காருவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.