உள்ளூர் செய்திகள்
யுவலட்சுமி
- மதுரை அருகே கோவில் பெண் ஊழியர் மாயமானார்.
- புட்டுத்தோப்பு சிவன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
மதுரை
மதுரை கரிமேடு மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் யுவலட்சுமி (23). புட்டுத்தோப்பு சிவன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 9-ந் தேதி காலை யுவலட்சுமி, மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள கல்வி நிலையத்திற்கு படிக்க செல்வதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தந்தை செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.