உள்ளூர் செய்திகள்
வாலிபருக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது
- கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மேல பொன்னகரம், கொம்ப முத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் (வயது19). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கபடி போட்டி தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கார்த்திக் கோமஸ்பாளையம், அங்கன்வாடி மையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தியதுடன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாய்க்கரை ஜான்பாஷா மகன் ஹபிமுகமது (23), கிருஷ்ண பாளையம் மாடசாமி மகன் ஆனந்தகுமார் என்ற ஏட்டு கண்ணன் (24), புது ஜெயில் ரோடு சைலேந்திரன் மகன் அஜய்குமார் என்ற குள்ளமணி (23), முரட்டன்பத்திரி, ராம் நகர் பிச்சைமுத்து மகன் வினித்குமார் என்ற மீசை (23), திண்டுக்கல் குமரன் திருநகர், கவுதம்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.