பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கெடு
- பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது
மதுரை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராஜசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனக்கு சொந்தமான நிலத்தை மற்றொரு தரப்பி னர் மோசடி ஆவணங்கள் மூலம் பந்தல்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து ள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் எந்த உரிமையும் கோருவது கூடாது என்று 2020-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதுவரை அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டுவிட்டது. இறுதி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார்.
மனுதாரர் வக்கீல் மோகன் ஆஜராகி, மனுதா ரருக்கு சொந்தமான நிலத்தை 3-ம் தரப்பினர் உரிமை கோருகின்றனர். இதுசம்பந்தமாக உரிய உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி, மனுதாரர் விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அது சம்பந்தமாக விசாரித்துதான் முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை வருகிற 2-ந்தேதிக்குள் பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும்.
மனுதாரர் சொத்து ஆவணத்தில் தவறு நடந்திருந்தால் அதை பதிவுத்துறை தலைவர் தானாக முன்வந்து திருத்த வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் உரிமை கோரக்கூடாது. இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.