உள்ளூர் செய்திகள்

சோழவந்தானில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

Published On 2023-01-30 06:56 GMT   |   Update On 2023-01-30 08:33 GMT
  • சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
  • இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழ வந்தான் அரசர் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.

சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ெநல்லை, தூத்துக்குடி, வத்தலகுண்டு, திண்டுக்கல், சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.

நேற்று இரவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் (சோழவந்தான்) ஜெயராமன், (வாடிப்பட்டி) பால்பாண்டி, துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்தி, ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்ய பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேட யங்களை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை ஜெ.ஜெ.கூடைப்பந்து போட்டி கிளப் தலைவர் முரளி சோழகர் செய்திருந்தார்.

Tags:    

Similar News