உள்ளூர் செய்திகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.
- இந்த தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர், புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தெரிவித்தனர்.
புதூர்
மதுரை வடக்கு மின் கோட்டம் சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (10-ந் தேதி) நடக்கிறது. புதூர் கவுன்சிலர் அலுவலகம், மூன்று மாவடி ரவுண்டானா, வளர் நகர், உத்தங்குடி பஸ் நிலையம் அருகில், அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில், வண்டியூர் கவுன்சிலர் ஆபீஸ் அருகில், அய்யர் பங்களா அய்யாவு தேவர் திருமண மண்டபம், பனங்காடி செக் போஸ்ட், நாராயணபுரம் எம்.ஐ.ஜி. காலனி, கிருஷ்ணாபுரம் காலனி மெயின் ரோடு ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை பொதுமக்கள் இணைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் மலர்விழி, புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் தெரிவித்தனர்.