உள்ளூர் செய்திகள்

'சில்வர் ஸ்மைல்' புதிய ஷோரூம் திறப்பு விழா

Published On 2023-09-30 14:54 IST   |   Update On 2023-09-30 14:54:00 IST
  • தங்கமயில் ஜூவல்லரியின் ‘சில்வர் ஸ்மைல்’ புதிய ஷோரூம் திறப்பு விழா நாளை தொடங்குகிறது.
  • புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

மதுரை

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் "சில்வர் ஸ்மைல்" என்கிற புதிய கிளையை மதுரை நேதாஜி ரோட்டில் தங்கமயில் ஜூவல்லரி அருகில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் தொடங்கு கிறது.

இந்த புதிய ஷோரூமில் வெள்ளி மோதிரம், காப்பு, தோடு, செயின் டாலர்கள் என லேட்டஸ்ட் டிசைன் களில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளியில் தங்கம் முலாம் பூசப்பட்ட மாலை, நெக்லஸ், வளையல், ஒட்டியாணம் மற்றும் பரிசு பொருட்கள் என இளம் தலைமுறை யினருக்கு பிடித்த பொருட்களை அறிமுகம் செய்கிறது.

மதுரையின் பெருமை யான மீனாட்சி அம்மனின் திருவுருவம் பதித்த விக்ரகம், படங்கள், பரிசு பொருட்கள் என தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது. புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News