உள்ளூர் செய்திகள்

திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்

திருநங்கைகளுக்கு தையல் எந்திரம்

Published On 2023-04-27 08:56 GMT   |   Update On 2023-04-27 08:56 GMT
  • திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
  • சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.

மதுரை

திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News