உள்ளூர் செய்திகள்

சாட்சியை மிரட்டிய தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-08-20 14:09 IST   |   Update On 2022-08-20 14:45:00 IST
  • சாட்சியை மிரட்டிய தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை கல்மேடு, சவுந்தரபாண்டி நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் முகேஷ் பாபு (வயது 24). சவர தொழிலாளி. இவர் நேற்று இரவு நாகனாகுளம் வாசுநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த முகேஷ் பாபு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

முகேஷ்பாபு கடந்த 2019-ம் ஆண்டு விஸ்வநாத புரம் கபிலர் தெருவை சேர்ந்த சரத் பாண்டியன் (27) என்பவரை அரிவா ளால் வெட்டி உள்ளார். இதுதொடர்பாக கே.புதூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடச்சனேந்தல் ஏ.ஆர். நகரை சேர்ந்த கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் முகேஷ் பாபு, 'நீ சாட்சி சொல்லக்கூடாது' என்று ராம்பிரசாத்தை மிரட்டிய தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் சவர தொழிலாளி முகேஷ் பாபுவை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் அவர்கள் விஸ்வநாதபுரம், கபிலர் தெருவை சேர்ந்த சரத்பாண்டியன் (27), கடச்சனேந்தல் ஏ.ஆர். நகர் கவுரிசங்கர் மகன் ராம் பிரசாத் (23), பனங்காடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் கிஷோர் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை தல்லாக்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News