உள்ளூர் செய்திகள்

அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை

Published On 2023-07-28 14:21 IST   |   Update On 2023-07-28 14:21:00 IST
  • அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை நடந்தது.
  • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சாத்தங்குடியைச் சேர்ந்த பாண்டி(வயது 57) பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி சன்னதியின் கதவை உடைத்து உள்ளே இருந்த பாரம்பரியான மரப் பெட் டியில் வைக்கப்பட்டிருந்த 6 பித்தளை மணி, பூர்ண கலா கவசம், அய்யனார் சாமி கவசம் மற்றும் பூஜை பொரு ட்களை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 21 ஆயிரம் ஆகும்.

மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி சன்னதி கதவு உடைக்கப்பட்டு பொ ருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட் டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News