உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்

Published On 2023-11-14 06:57 GMT   |   Update On 2023-11-14 06:57 GMT
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
  • மதுரை கலெக்டருக்கு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரையூர் பகுதி விவசாயிகள் டி.கல்லுப்பட்டி வேளாண்மை அலுவல கத்தில் அரசு மானியத்தில் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்தனர். 2 மாதங்கள் காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

குதிரை வாலிக்கு பதிலாக மாட்டு தீவனப்புல் முளைத்து வளர தொடங்கி உள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வேளாண்மை அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் விதையை மாற்றி தந்து விட்டதாக கூறி விவசாயிகளிடம் சமரசம் செய்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக உரிய நஷ்ட ஈடுபெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. விதை மாற்றி கொடுக்கப் பட்டதால் ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த பகுதிகளில் உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News