பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்
- பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
- மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.
ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.
அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.
உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.
எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.