உள்ளூர் செய்திகள்

கூடாரம் அமைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடு பட்ட கவுன்சிலர் இளங்கோவன்.

கூடாரம் அமைத்து கவுன்சிலர் நூதன முறையில் போராட்டம்

Published On 2023-09-21 08:27 GMT   |   Update On 2023-09-21 08:27 GMT
  • கூடாரம் அமைத்து கவுன்சிலர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • இந்த நூதன போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் இளங்கோவன். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.வி. நகரில் கழிவுநீர் வடிகால் கட்டி தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அதற்கான நடவ டிக்கைகள் எதுவும் தொடங் காததால் போராட்டம் நடத்த முடிவு செய்தார். மேலும் பேரூராட்சி நிர்வா கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நூதன முறையில் தனி ஒருவராக திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பேரூராட்சி அலுவலகத் தின் நுழைவு வாயில் முன் பாக வாடிப்பட்டி பேரூ ராட்சி நிர்வாகமே, ஆர்.வி.நகர் சாக்கடை நீரை வெளியேற்ற 20 அடி நீள வாய்க்கால் கட்ட ஆறு மாதங்களா, ஏற்கனவே டெங்கு மரணம் உறுத்த வில்லையா, திறமையற்ற நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் சாக்கடை கட்டு என கோஷங்கள் எழுப்பினார்.

மேலும் கோரிக்கை வாச கம் எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டு அதன் அருகில் துணியால் கூடாரம் அமைத்து தனது போராட் டத்தை தொடங்கினார். தகவலறிந்த செயல் அலுவ லர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் இளங்கோவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரை வில் காலக்கெடுப்படி வடி கால் அமைப்பதாக உறுதிய ளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட் டது.

இந்த நூதன போராட் டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News