தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ெபாருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.
- சோழவந்தான் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- தமிழக அரசு உத்தரவுபடி தரமற்ற, மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பொது மக்களோ, வியாபாரிகளோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூரா ட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்கும் வகையிலும், தமிழக அரசு உத்தரவுபடி தரமற்ற, மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பொது மக்களோ, வியாபாரிகளோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும். அத்துடன் அபராதமும், தண்டனை பெற வழிவகை செய்யப்படும் என்று கடை வீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டதை அறிந்து பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுடன் பூவலிங்கம், வெங்கடேசன், சந்தோஷ், செல்வி, ராணி அலுவல பணியாளர்கள் ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.