உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள். 

100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவுக்கு போராடும் மக்கள்

Published On 2023-01-12 15:33 IST   |   Update On 2023-01-12 15:33:00 IST
  • திருப்பரங்குன்றம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
  • அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தாலுகா கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல தென்பரங்கு ன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News