நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
- நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
- மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம்.
மதுரை
மதுரை ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் 2 தளத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி யுடன் முதிர்வு காலத்தில் முதலீட்டு ெதாகையுடன் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.
அவர்கள் உறுதிமொழி அளித்தபடி பணம் செலுத்தி யவர்களுக்கு வட்டியுடன் முதலீட்டு தொகையை திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக இதுவரை 1,428 புகார்கள் பெறப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் யாரே னும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் இந்த மாதம் (ஏப்ரல்) இறுதிக் குள் உரிய ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம்.
இந்த தகவலை பொரு ளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி, இன்ஸ்பெக்டர் கமருன்னிசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.