உள்ளூர் செய்திகள்

மதுரை புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்.

ஜனாதிபதி வேட்பாளரை ஏன் எதிர்க்கிறோம்-திருமாவளவன் பேச்சு

Published On 2022-07-01 15:15 IST   |   Update On 2022-07-01 15:15:00 IST
  • ஜனாதிபதி வேட்பாளரை ஏன் எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் பேசினார்.
  • கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

மதுரை

மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது.

அலங்கை செல்வரசு வி.பி. இன்குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.கதிரவன் வரவேற்று பேசினார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் மாறி இருக்கிறது. எங்களை புறம் தள்ளிவிட்டு, தமிழக அரசியல் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. அம்பேத்கரை ஒழுங்காக படித்தவர்கள் யாரும் சாதியை பற்றி பேசமாட்டார்கள்.

அவர்களுக்கு ஒரே எதிரி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை எதிர்ப்பதற்கு காரணம், அவர் எந்த கட்சியின் பின்னணியில் இருக்கிறார் என்பதே.

மக்களை ஏமாற்றுவதற்காக பா.ஜ.க., இஸ்லாமியர், தலித் பழங்குடியினருக்கு உயர்ந்த பதவிகளை அளித்து அவர்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் அவரை எதிர்க்கிறோம். அவருடைய கொள்கை எங்களுக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மதுரை கிழக்கு தொகுதி செலயாளர் கார்வண்ணன், வழக்கறிஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அரச.முத்து பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News