உள்ளூர் செய்திகள்

குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-01-12 10:04 GMT   |   Update On 2023-01-12 10:04 GMT
  • குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
  • இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் சாக்கடை, குடிநீரிலும் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கைகள் தொடர்பாக நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்துள்ளேன்.

குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க மதுரை மாநக ராட்சி கமிஷன ரிடம் பேசி இந்த பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

Tags:    

Similar News