உள்ளூர் செய்திகள்

மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

Published On 2022-08-28 09:15 GMT   |   Update On 2022-08-28 09:15 GMT
  • போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  • பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மதுரை

மதுரையில் போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை பினாக்கிள் ஹாப் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இதனை மதுரை மாநகர காவல்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. 'மாற்றத்திற்காக ஓடுங்கள்' என்ற தாரக மந்திரத்தின் மூலம், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமைந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஜித்சிங்காலோன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண், சிறுவர்- சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ரேஸ் கோர்ஸ் சாலை, எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், அழகர்கோவில் மெயின் ரோடு, புதூர் போலீஸ் நிலையம், கடச்சனேந்தல் வழியாக சென்றது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News